வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணை பந்தாடும் கார்! இணையத்தில் வைரலாகும் காணாளி

வீதியைக் கடந்து செல்ல முற்பட்ட பெண் ஒருவரை எதிரில் மிக வேகமாக வந்த கார் மோதியது. அந்தப் பெண் தூக்கி வீசப்படுகிறார். ஒரு கணப் பொழுதில் நடந்து முடிந்த இந்தச் சம்பவம் குறித்த பார்ப்போரை பதை பதைக்க வைக்கின்றது.

வட இந்தியாவின் மோகனூர் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்இ தனது இரு சக்கர வாகனத்தில் இளம்பெண் ஒருவர் சாலையைக் கடக்கிறார்.

அவர் இரு புறங்களும் பார்த்துவிட்டு மெதுவாகச் செல்ல முற்படுகிறார்.அந்த நேரத்தில் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று, அந்த இளம் பெண்ணின் வண்டி மீது மோதுகிறது. வாகனத்துடன் அந்தப் பெண் தூக்கி வீசப்படுகிறார். இந்தக் கட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளன.

அருகில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடிவந்து வந்து அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்