2020 ஜனாதிபதித் தேர்தலில் களம் குதிக்கத் தயாராகும் கொழும்பின் பிரபல கோடீஸ்வரர்!

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களம் குதிக்கவுள்ளதாகவும் அவ்வாறு போட்டியிட்டு தான் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் தான் ஒரே நாளில் செலுத்தி விடுவேன் என் அதிரடியாக அறிவித்துள்ளார் கொழும்பின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ரொஹான் பல்லேவத்த.

கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.Toyota, Honda, Volvo, BMW, Aston Martin, Opel, போன்ற பல வாகனங்களின் சென்சார் உற்பத்தி செய்கின்ற இலங்கை தொழிற்சாலையின் உரிமையாளரே இவராவார்.

தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமின்றி உலக அமைப்புகள் பலவற்றில் இலங்கை கடன் பெற்றுள்ளது. இந்தக் கடன்களை ஒட்டுமொத்த மாக அடைப்பதென்பது இலங்கை அரசினால் முடியாத காரியம்.நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் குறைந்தது ஒரு லட்சம் ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கோடீஸ்வர வர்த்தகரின் அறிவிப்பு நாட்டு மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலையில் குறித்த கோடிஸ்வரர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகி நாட்டின் கடன் சுமையை இல்லாது செய்தால், இலங்கை சிங்கப்பூர் ஆகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்