மத்திய கிழக்கில் காணாமற் போன மனைவிக்கு நடந்தது என்ன ? அழுதுபுலம்பும் கணவன்

தமது குடும்பத்தை காப்பாற்றும் நிமித்தம் தொழில் தேடி குவைத் நாட்டிற்கு சென்று  17 வருடங்களாக காணாமல் போன இலங்கைப் பணிப்பெண் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த எச்.எம் சந்திரலதா என்பவர் தொடர்பிலே தகவல்கள் வௌியாகியுள்ளன.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக அவர் குவைத்திற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தே தனது மனைவி குவைத் நாட்டிற்கு பணிக்கு சென்றிருந்ததாக அவரின் கணவன் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் இதுவரை குறித்த முறைப்பாடு தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போன தமது கணவன்மார்களை தேடி நாளும் பொழுதுமாக அலையும் நம் தாய்மார்கள் மத்தியில் தொழில் தேடி அந்நிய தேசம் சென்று காணாமற் போன தமது மனைவிமார்களை இங்கு பிள்ளைகளை வைத்துக் கொண்டு தேடித் திரியும் கணவன் மார்களின் கோரிக்கைகளையாவது கணக்கில் எடுத்து செயற்படுமா நல்லாட்சி அரசு? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்