இணைந்த இரு துருவங்களினால் உச்சக்கட்ட பரபரப்பு முடிவுக்கு – புதிய துணை முதல்வராகிறார் ஓ.பி.எஸ்

நீண்ட இழுபறிக்கு பின்னர் தமிழகத்தில் நிலவிய உச்சக்கட்ட பரபரப்பான அரசியல் களம் முடிவுக்கு வந்துள்ளது. எதிரும் புதிருமாகவிருந்த ஓ.பி எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இன்று மாலை சென்னையிலுள்ள அதிமுகவின் தலைமைச் செயலகத்தில் இணைந்தன. இதனையடுத்து தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட இருக்கிறது. மாஃபா பாண்டியராஜன் மீண்டும் பள்ளி கல்வித்துறை அமைச்சராகிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை வழங்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பதவியேற்பு விழா குறித்து ஆலோசனை நடத்தினார்.

நல்ல நாளில் ஒன்றாக இணைந்துள்ளோம். நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய ஓபிஎஸ் கூறியுள்ளார்.

கடந்த 6 மாதமாக பிளவுபட்டிருந்த அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன.6 மாதம் கழித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி இணைந்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்