மின்சாரத்தில் மட்டும் இயங்கும் முதலாவது நாடாக வரப்போவது எந்த நாடு தெரியுமா?

தனித்து மின்சாரத்தில் இயங்கும் முதல் உலக நாடாக நோர்வே மாற்றம் பெறுமென வல்லுனர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். இங்குள்ள Energi Norge  என்ற தொழில் சார்பாக ஆலோசனை வழங்கும் அமைப்பொன்று  தன் கணிப்பில் 2050ம் ஆண்டளவில் நாடு முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் நிலை வந்துவிடும் எனக் கூறி இருக்கிறது

இன்றைய நிலையில் நீர் மின்சக்தி மூலம் எடுக்கப்படும் மின்சாரமே , நோர்வேக்கு தேவையான மின்சாரத்தின் 96வீதத்தை அளித்து வருகின்றது . மின்சாரத்தில் ஓடும் கார்களின் தொகை இப்பொழுது இங்கு 110,000ஐ எட்டிப் பிடித்துள்ளது.

2025க்கு பின்னர் பெட்ரோல், டீசல் போன்றவற்றில் ஓடும் கார்கள் , நாட்டில் விற்பனைக்கு இராது என்று சமீபத்தில் அமைச்சர்கள் பிரகடனம் செய்திருந்தார்கள் .

ஆரம்பத்தில் குறிப்பிட்ட அமைப்பின் 24 புள்ளிகள் திட்டமொன்றின்படி , நாடெங்கிலும் கார்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், மின்சாரக் கார் பவானையாளருக்கு வரி விலக்கும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்