இலங்கையின் திருமணச் சான்றிதழ்தொடர்பாக ஒவ்வொரு இலங்கை பிரஜையயும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்!!

திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அவர்களது திருமணத்தினை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஆவணம் திருமண சான்றிதழ்.
இதனை பெறுவது, மொழி மாற்றுவது மற்றும் பிரதியினை பெற்றுக் கொள்வதற்கென இலங்கையில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
திருமணச் சான்றிதழ் வழங்குதல்

தகுதி
இலங்கைவாசி கோட்ட செயலகத்தின் எல்லைக்குள் திருமணம் செய்தவர் என்றால் அவர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திலிருந்து திருமண சான்றிதழ் பெறவதற்கு தகுதியானவர்.
விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும்.
இருதரப்பினர்களில் இஸ்லாமியர் இல்லாத பட்சத்தில் எந்த விண்ணபதாரரும் திருமண சான்றிதழ் பெறலாம்.

குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் இரண்டு வெவ்வேறு கோட்ட செயலகத்தை சார்ந்தவராக இருந்தால், அவர்களின் திருமண பதிவை இரண்டில் எந்த கோட்ட செயலக அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.

சமர்ப்பிக்கும் முறைகள்
1. திருமண அறிக்கை படிவம் பெறுதல்
விண்ணப்பதாரர் திருமண படிவத்திற்கான அறிக்கையை விசாரணை குழுவிடமிருந்து அல்லது ஏதாவது சம்பந்தப்பட்ட கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு:
விண்ணப்பதாரர் தன் திருமணத்தை தேவாலயம் அல்லது கோவிலில் நடத்த விரும்பினால் பதிவாளரிடம் அறிக்கை ஒன்றை கொடுத்து “ரோஸ் நிற சீட்டை” பெற்று பதிவு படிவத்தை சிறிது காலம் கழித்து சமர்ப்பிக்க வேண்டும்.

2. திருமண படிவத்தை ஒப்படைத்தல்
விண்ணப்பதாரர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று குறைந்த பட்சம் திருமணம் நடக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் திருமண ஒப்படைத்தல் சமர்ப்பிக்க வேண்டும்.

3. விண்ணப்ப படிவம் பெறுதல்
விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை விசாரனை குழுவிடமிருந்து அல்லது ஏதாவது சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து பெற வேண்டும்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு ஆவணங்களையும் வழங்க வேண்டும்.

இருதரப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் 2 சாட்சிகள்
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்
ஏற்கனவே திருமணமாகி துணை இறந்திருந்தால் – இறப்புச் சான்றிதழ்
4. விண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல்

விண்ணப்பத்தை முத்திரையிடப்பட்ட உரையில் வைத்து தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்

குறிப்பு:
விண்ணப்பத்தை தபாலில் அனுப்பினால் பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர் அவசர சூழ்நிலையைக் காட்டி அதே நாளில் சான்றிதழ் பெற வேண்டும் எனில் விண்ணப்பதாரர் கோட்ட செயலாளர், துணை கோட்ட செயலாளர், அல்லது நிர்வாக அலுவலரை நேரடியாக சந்திக்க வேண்டும்.

சில வழிமுறைக்குப் பின் திருமண சான்றிதழ் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
விண்ணப்ப படிவங்கள்

விண்ணப்ப படிவத்தின் இலக்கம்/பெயர் – விபரம்
திருமணச்சான்றிதழ்(பொது அல்லது கண்டியன்) அல்லது பதிவை தேடுதலுக்கான விண்ணப்பம் (படிவம் 121) – திருமணத்தை பதிவு செய்தல்

திருமண அறிக்கை
பதிவாளரிடம் திருமணம் தேவாலயம் அல்லது கோவிலில் நடைபெறும் என தெரிவித்தல் மற்றும் திருமணம் தேவாலயம் அல்லது கோவிலில் மத சடங்குகளின் படி தான் நடக்கிறது என்று குறிக்கும் சீட்டை பெறுதல்.

படிப்படியான வழிமுறைகள் (திருமணச் சான்றிதழ் வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து திருமண அறிக்கையை பெறுதல்.
படி 2: விண்ணப்பதாரர் அறிக்கையைத் தயாரித்து பூர்த்தி செய்தல்.
படி 3: விண்ணப்பதாரர் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலக பதிவாளரிடம் இருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்.
படி 4: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தைத் தயாரித்து பூர்த்தி செய்தல்.
படி 5: விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை வழங்குதல்.
படி 6: விண்ணப்பத்தை கோட்ட செயலகத்திற்கு அஞ்சல் மூலமாக அல்லது கோட்ட செயலக பதிவாளருக்கு நேரடியாக ஒப்படைத்தல்.

குறிப்பு:
விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாகவோ தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் சமர்ப்பித்தல்
படி 7: கோட்டச் செயலகம் விண்ணப்பத்தை வாங்கி தேவாலயம் அல்லது கோவிலில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை சரிபார்த்தல்.
படி 8: விண்ணப்பதாரர் திருமணச் சான்றிதழை அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக வாங்குதல்.

குறிப்பு :
விண்ணப்பதாரர் தகுதியற்றவராக கருதப்பட்டால், பதிவாளர், விண்ணப்பம் தகுதி அற்றதற்கான காரணங்களை குறிப்பிட்டு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக திருப்பி அனுப்புவார்.

செயல்முறை காலக்கோடு
திருமண அறிக்கையை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவாவது சமர்ப்பிக்க வேண்டும்.
தேவாலயம் அல்லது கோவிலிடமிருந்து திருமணத்திற்கான உறுதி செய்யப்பட்ட விபரங்கள் பெறப்பட்டவுடன் திருமணச் சான்றிதழை தயாரித்து விண்ணப்பதாரருக்கு 2 அல்லது 3 நாட்களுக்குள் அனுப்பப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்

ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 மதிப்புள்ள முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது(3 பிரதிகள் வரை)
குறிப்பு:
முத்திரையை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டியிருந்தால் பதிவு செய்யப்பட்ட உறையில் அனுப்ப அறிவுறுத்தப்படுவார்கள்.
சான்றிதழை பதிவு தபாலில் அனுப்ப வேண்டியிருந்தால் தேவையான பதிவுக் கட்டணம் உறையுடன் இணைத்திருக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்

இரு தரப்பினர்கள் மற்றும் 2 சாட்சிகளின் தேசிய அடையாள அட்டை
முன்னதாக திருமணம் நடந்து விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்
முன்னதாக திருமணம் நடந்து கணவன்/மனனவி இறந்திருந்தால் – இறப்பு சான்றிதழ்
திருமணச் சான்றிதழினை மொழி மாற்றம் செய்தல்
படிப்படியான வழிமுறைகள்,
படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்.
படி 4: மொழிபெயர்ப்புக்கான செயற்பாடு நடப்பதற்கு கிட்ட தட்ட 3 நாட்களாகும்.
படி 5: மொழி பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.
தகுதி:
உண்மையான திருமண சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.
சமர்ப்பிக்கும் முறைகள்
அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப் பதிவாளர் காரியாலத்தின் கருமபீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்:
விண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்கு உரிய விண்ணப்பம்.
செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:

விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம் – விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
கட்டணம் – ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய திருமணசான்றிதழ்
தமிழ் மற்றும் சிங்கள மொழியிலுள்ள திருமணச்சான்றிதழை ஆங்கிலத்தில் மொழி மாற்றுவதற்கான விண்ணப்ப படிவம்..
திருமணச் சான்றிதழின் பிரதியை பெற்றுக்கொள்ளல்
தகுதி
செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் திருமணம் நடைப்பெற்ற இலங்கையினர் திருமணச் சான்றிதழின் பிரதியை திருமணம் நடைப்பெற்ற பகுதியின் கோட்டச் செயலகத்திடமிருந்து பெற தகுதியானவர்கள்.
திருமணம் வசிப்பிடத்திற்கு வெளியே நடைப்பெற்றால் அவர் திருமணம் நடைப்பெற்ற பகுதிக்கான கோட்டச் செயலகத்திற்கு போக வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
1. விண்ணப்பப்படிவம் பெறுதல்
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை விசாரணைப் பிரிவிலிருந்தோ அல்லது எந்த ஒரு கோட்ட அலுவலகத்தின் அதற்குண்டான சான்றிதழ் பதிவாளரிடம் இருந்தோ பெற வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்தல்.
கீழ்க்கண்ட இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
தேசிய அடையாள அட்டை
2. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க தேவையானவை
விண்ணப்பதாரர் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பதிவாளரின் முகவரியிடப்பட்ட தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும்
குறிப்பு:
விண்ணப்பதாரர் தபாலில் அனுப்புவதென்றால் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர் ஆரம்பப்பதிவு அல்லது உண்மைப் பதிவிலக்கத்தின் சரியானத் திகதியை அறிந்திருந்தால் மிக வேகமாகவும் எளிதாகவும் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
திருமணச் சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
செயல்முறைக் காலக்கோடு
ஆவணங்களை எளிதாக தேடுவதற்காக விண்ணப்பதாரர் உண்மைத் திருமணச் சான்றிதழின் பதிவிலக்கம் அல்லது பதிவிலக்கத்தை தரும் பட்சத்தில் புதிய திருமண சான்றிதழ் 2 இலிருந்து 3 நாட்களுக்குள் தயார் செய்து விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
பிரதியைப் பெறுவதற்கான முத்திரைக் கட்டணங்கள் பின்வருமாறு

பதிவுத் திகதி அல்லது சான்றிதழ் இலக்கம் தெரிந்திருந்தால் பிரதியைப் பெறுவதற்கானக் கட்டணம் ரூ.5
ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுத் திகதி தெரியாதப்பட்சத்தில் ஏடுகளில் 3 மாதங்கள் தேடி ஒரு பிரதியைப் பெறுவதற்கு முத்திரைக் கட்டணம் ரூ.10 ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 செலுத்தி மேலும் இரு பிரதிகள் பெற்றுக்கொள்ளலாம்.
இறப்பிலிருந்து 2 வருடக்காலங்களுக்கு ஏடுகளில் தேடப்பட வேண்டியிருப்பின் முத்திரைக் கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.5 செலுத்த வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்

இரு தரப்பினர்கள் மற்றும் 2 சாட்சிகளின் தேசிய அடையாள அட்டை
முன்னதாக திருமணம் நடந்து விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்
முன்னதாக திருமணம் நடந்து கணவன்/மனனவி இறந்திருந்தால் – இறப்பு சான்றிதழ்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்