இந்த ராசிக்காரர்கள் இந்தப் பொருட்களை ஸ்ரீ ராம பிரானுக்கு வைத்து படையல் செய்தால் வாழ்க்கையில் அதிஷ்டம் தூக்கி அடிக்குமாம்..!!

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு ராம பிரானுக்கு படைத்து வணங்கினால் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?மேஷம்:மேஷ ராசிக்காரர்கள் மாதுளை அல்லது லட்டுவை ஸ்ரீராமருக்குப் படைத்து வழிபட்டால், இதுவரை வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் உடனே விலகும்.ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று ரசகுலாவை ஸ்ரீராமருக்கு வைத்து படைத்து வணங்கினால், செல்வ வளம் அதிகரிக்கும்.மிதுனம்:மிதுன ராசிக்காரர்கள், ஸ்ரீராம பிரானுக்கு முந்திரி பர்பியைப் படைப்பதுடன், அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மிகவும் நல்லது.

கடகம்:கடக ராசிக்காரர்கள், தேங்காய் பர்பி அல்லது மேவா பர்பியை ஸ்ரீராமருக்குப் படைத்து வணங்கினால், இதுவரை உங்களின் செயல்களுக்கு தடையாக இருந்த அனைத்தும் நீங்கும்.சிம்மம்:சிம்ம ராசிக்காரர்கள், வெல்லத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வழிபட்டால், இனிமேல் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.கன்னி:கன்னி ராசிக்காரர்கள் பேரிக்காய் அல்லது ஏதாவது பச்சை நிற பழங்களை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.துலாம்:துலாம் ராசிக்காரர்கள், ஆப்பிளை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், ராம பிரானின் முழு அருளையும் பெறலாம்.விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் எள்ளு உருண்டையை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்துமே அகலும்.

தனுசு:தனுசு ராசிக்காரர்கள் கடலை மாவால் ஆன இனிப்பு பலகாரத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் நல்ல விஷயங்கள் நடக்கும்.மகரம்:மகர ராசிக்காரர்கள் நாவல் பழம் அல்லது கருப்பு திராட்சையை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், வாழ்வில் ஓரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.கும்பம்:கும்பம் ராசிக்காரர்கள் சப்போட்டா அல்லது சாக்லேட் பர்பியை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மீனம்:மீனம் ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று, ஜிலேபி அல்லது வாழைப்பழத்தை ஸ்ரீராம பிரானுக்குப் படைத்து வணங்கி, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினால் அவர்களின் வாழ்வில் நல்லதே நடக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்