காதலர் தினத்தில் யாழில் நடக்கும் மோசமாக செயற்பாடுகள்!! பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு..

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில், காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது. பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். இதே வேளை யாழ் நகரில் அமைக்கப்பட்டிருந்த காதலர் தின விற்பனைக் கடைகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.பாடசாலைக்கு அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த கடைகள் திக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து காதலர் தினத்திற்காக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாணவர்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கடைத் தொகுதிகளுக்கு, மாநகர சபைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.குறித்த கடைகளில் மாணவர்கள் காதலர் தின பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆரம்பித்ததனை தொடர்ந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு இது தொடர்பில் மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.எனினும், அந்தக் கடைகைளை அகற்றுவதற்கு யாழ். மாநாகர சபை நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள் கோபமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்