யாழ் அரச அதிபர் வேதநாயகன் திடீர் ஓய்வு!! புதிய அரசாங்க அதிபர் நியமனம்..!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அவர் ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள நா.வேதநாயகன், இரண்டு மாதங்கள் முன்னதாகவே பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.யாழ் மாவட்ட அரச அதிபர் பொறுப்பிலிருந்து இடமாற்றம் வழங்கப்பட்டு, அமைச்சிற்கு இடமாற்றப்பட்டதையடுத்தே அவர் இந்த முடிவை எடுத்தார்.இதேவேளை, யாழ் மாவட்ட அரச அதிபரை ஓய்வு வரை இடமாற்றம் செய்ய வேண்டாமென இலங்கை தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்கவில்லையென அறிய முடிகிறது.புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுணத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்