பேரூந்தில் அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்த சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

பேருந்தில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒலிபரப்பிய சாரதிக்கு காலி நீதிமன்றம் 32,500 ரூபா அபராதம் விதித்துள்ளது.அத்துடன் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தில் தனியார் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த சாரதிக்கு அபராதம் விதிப்பதாக காலி நீதிமன்ற நீதிபதி பவித்ரா சன்ஜீவனி பத்திரனி உத்தரவிடுள்ளார்.பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்மாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தமைக்காக 7,500 ரூபா அபராதமும், காலாவதியான அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தமைக்காக 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்