யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மணவாளக் கோலத் திருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மணவாளக் கோலத் திருவிழா நவோத்ர சகஸ்ர சங்காபிஷேகம் 12.02.2020 புதன்கிழமைநிகழும் விகாரி வருடம் தைத்திங்கள் இருபத்தொன்பதாம் நாள் 12.02.2020 புதன்கிழமை உத்தர நட்சத்திரம் கூடிய சுபவேளையில் ஸ்ரீ துர்க்காதேவிக்கு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மணவாளக் கோலக் திருவிழா நடைபெறத் திருவருள் கைகூடியிருக்கின்றது.

கிரியா கால விபரம்:

12.02.2020 புதன் கிழமை
காலை 6.30 மணிக்கு விஷேடசந்தி, யாகபூஜை, சங்குபூஜை
காலை 8.00 மணிக்கு காலை சந்திப்பூஜை
காலை 8.30 மணிக்கு விஷேட திரவிய ஹோமம்
காலை 9.00 மணிக்கு திரவியாபிஷேகம்
காலை 9.30 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, மஹா சங்காபிஷேகம்
மாலை 5.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை, திருவூஞ்சல்
மாலை 6.00 மணிக்கு அம்பாள், விநாயகர், முருகன் சகிதம் பூந்தண்டிகையில் எழுந்தருளி வெளி வீதியுலா வருதல் இடம்பெறும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்