சகோதரியை இழந்த சோகத்தின் மத்தியிலும் வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்த பங்களாதேஷ் கப்டன்..!!

19 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான உலக கிண்ணத்தை வென்ற பங்களாதேஸ் அணியின் தலைவர் அக்பர் அலி இறுதிப்போட்டிக்கு சில வாரங்களிற்கு முன்னரே தனது மூத்த சகோதரியை இழந்தார் என பங்களாதேஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜனவரி 22 ம் திகதி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் அக்பர் அலியின் மூத்த சகோதரி உயிரிழந்தார் என பங்களாதேஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அக்பர் அலி மீது மிகவும் பிரியமானவரான அவரது சகோதரி ஜனவரி 18ம் திகதி பங்களாதேஸ் சிம்பாப்வேயை தோற்கடிப்பதை தொலைக்காட்சியில் பார்த்தார் ஆனால் மிகவும் முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை தனது சகோதரன் தேடித்தருவதை பார்ப்பதற்கு அவர் உயிருடன் இருக்கவில்லை என பங்களாதேசின் பிரபல நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

அக்பரின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதால் அவரது குடும்பத்தினர் அவரது சகோதரியின் இழப்பை முதலில் அவருக்கு தெரிவிக்கவில்லை ஆனால் அக்பர் எப்படியோ தெரிந்துகொண்டார் என பங்களாதேஸ் நாளேடு தெரிவித்துள்ளது.அக்பர் தனது சகோதரி மீது மிகுந்த பாசமானவராக காணப்பட்டார்அவரது சகோதரியும் அவர் மீது மிகுந்த பாசம்வைத்திருந்தார் என அக்பர்அலியின் தந்தை தெரிவித்துள்ளார்.நாங்கள் முதலில் அவருக்கு இதனை தெரிவிக்கவில்லை ஆனால் பாக்கிஸ்தானுடனான போட்டியின் பின்னர் அவர் எங்களை தொடர்புகொண்டு ஏன் தனக்கு அறிவிக்கவில்லை என கேட்டார் என அக்பர்அலியின் தந்தை தெரிவித்துள்ளார்.எனக்கு அவருடன் பேசுவதற்கான துணிச்சல் இல்லை என்ன சொல்வது என தெரியவில்லை எனத் தந்தை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்