தமது சிறப்பான ஆட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி பழிதீர்த்தது நியூஸிலாந்து..!!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 22 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் 73 ஓட்டங்களையும், மார்டீன் குப்டில் 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சஹால் 3 விக்கட்டுக்களையும், தாகூர் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து 274 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்று 22 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் சிரயாஸ் ஐயர் 52 ஓட்டங்களையும், ஐடோஜா 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியுசிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்