தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்பை மறைய வைக்க !! சிறந்த மருந்தாம் ..!

தீக்காயங்களை ஆற்றுவதில் சிட்ரஸ் பழங்கள் மிகச்சிறந்த பொருளாகும். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ளது.எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னரும் தடவுவது நல்லது.

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.ஆலிவ் ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்