தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸை கண்டுபிடிக்க இலங்கை மேற்கோள்ளும் அதிரடி நடவடிக்கை..!!

கொரோனா வைரஸினை உடனடியாக கண்டுபிடிக்க அதிகூடிய தொழில்நுட்ப திட்டங்கள் கொண்ட இயந்திரம் ஒன்று சுமார் 8 கோடி 20 இலட்சம் செலவழித்து சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் நான்கு நாட்களில் விமானம் ஊடாக குறித்த இயந்திரம் நாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும், அதற்கான பணத்தினை திறைசேரியில் இருந்து வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக உபவேந்தர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.இந்த இயந்திரம் மருத்துவ பீடத்தின் டெங்கு ஆராய்ச்சி மையத்தின் சோதனைக்கும் பயன்படுத்தப்படும் என்று துணைவேந்தர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்