கொரோனாவின் எதிரொலி…கட்டுநாயக்காவில் தயார் நிலையில் நோயாளர் காவு வண்டிகள்..!!

சீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் விமான நிலைய ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அந்த ஊழியர்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் மூலம் பயணியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால் அவரை உடனடியாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவர் உள்ளடங்கிய குழுவும் இது தொடர்பில் தீவிரமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்