விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி…இன்னும் ஐந்து தினங்களில் யாழ்- கொழும்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம்…!

யாழ்ப்பாணம்-கொழும்பு விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பம்.எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் FitsAir விமான சேவை யாழ்ப்பாணம் விமான நிலையம்- இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி……

கொழும்பிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்திற்கு காலை 8.20 மணிக்கு வந்தடைகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் விமானம் கொழும்புக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும். ஒரு வழி பயணச்சீட்டு கட்டணமாக 7500 ரூபாஅறிவிடப்படவுள்ளது.அனுமதிக்கப்படும் பொதிகளின் அளவு:கட்டணமின்றி 7 கிலோ கிராம். 20 கிலோ வரையும் 750 ரூபா செலுத்தி பொதிகளை கொண்டு செல்லலாம்மேலதிக ஒரு கிலோ கிராமுக்கு ரூபா 100 வீதம் அறிவிடப்படும் எனவும் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்