கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக மீண்டும் ரூபவதி கேதீஸ்வரன்.. இன்று காலை பதவியேற்பு..!

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த நான்கு வருடங்களாக முல்லைத்தீவு அரச அதிபராக கடமையாற்றி வந்த அவர் இன்று முதல் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலம் தொட்டு 2015 வரை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக நெருக்கடி மிக்க சூழலில் வினைத்திறனாக பணியாற்றி வந்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தை யுத்தப் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீளக் கட்டியமைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். பின்னர் 2015 ஆட்சி மாற்றத்துடன் முல்லைத்தீவுக்கு இடம்மாற்றம் பெற்ற அவர் தற்போதும் 2019 ஆட்சி மாற்றத்துடன் மீண்டும் கிளிநொச்சிக்கு அரச அதிபராக மாற்றம் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்