கொழும்பு வாழ் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஜனவரி 28,29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பில் காற்றின் தரம் குறைவாகக் காணப்படும் எனவும் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்று தரப் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி எஸ்.டி.எஸ்.பிரேமசிறி இதை தெரிவித்துள்ளார்.வங்காள வளிமண்டலத்தில் நிலவும் புழுதிப் புயலின் விளைவாகவே இவ்வாறு காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதன்படி இதயம் அல்லது நுரையீரல் நோயாளர்கள், குழந்கைள், முதியவர்கள் மற்றும் அநேக நேரங்களை வெளியே செலவிடுபவர்கள் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்