திடீரென வீழ்ந்து நொருங்கி பற்றியெரிந்த ஹெலிகொப்ரர்..!! புதல்வியுடன் பரிதாபமாகப் பலியான உலகின் மிகப் பிரபலமான கூடைப்பந்து நட்சத்திரம்..!!

அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவர் ஹெலிக்கொப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கலாபசாஸ் நகரில் ஏற்பட்ட ஹெலிக்கொப்டர் விபத்தில் அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரரான கோபி பிரையன்ட் (Kobe Bryant) மற்றும் அவரது 13 வயதுடைய மகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.41 வயதான பிரையன்ட் ஒரு தனியார் ஹெலிக்கொப்டரில் பயணித்த போது குறித்த ஹெலிக்கொப்டர் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வரலாற்றில் கோபி பிரையன்ட் அமொிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியனில் ஐந்து முறை மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.பிரபலங்கள் மற்றும் சக விளையாட்டு நட்சத்திர வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், அவரது திடீர் மரணம் குறித்து பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்