தேர்தலுக்காக சஜித்தின் 900 லட்சம் கடன்..!! ரணில் விக்ரமசிங்க வைத்த அசையாத ஆப்பு..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் விரிந்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்னும் தீராத தலையிடி வந்துகொண்டிருக்கும் தருணத்தில், சஜித் பிரேமதாசவுக்கு ரணிலினால் மீண்டும் தலையிடி கூடியுள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாச தேர்தலுக்காகச் செலவுசெய்த தொகை தொடர்பில் கணக்குக் கேட்டுள்ளார் ரணில்.ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதிவேட்பாளராக நின்ற சஜித் பிரேமதாச 900 இலட்சம் எவ்வாறு கடன்பட்டார் என்பதைத் தனக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கேட்பதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கூடிய கூட்டமொன்றின்போது அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.சஜித் பிரேமதாச இவ்வளவு பாரிய கடனை எதற்காக, எவ்வாறு செலவு செய்தார் என்பது பற்றித் தெளிவாக எழுத்துமூலம் கோரவுள்ளதாம் ஐக்கிய தேசியக் கட்சி மேலிடம்.எவ்வாறாயினும், தான் தேர்தலுக்காக அன்றி வேறு எதற்கும் 900 இலட்சம் பணத்தையும் செலவு செய்யவில்லை என உறுதியாகக் கூறிநிற்கிறார் சஜித். என்றாலும், உள்ளிடத்தில் இதுதொடர்பில் பல்வேறு கிசுகிசுக்கள் கசிந்துகொண்டுதான் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்