கொரோலினா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி..கொழும்பு மாநகரில் வேகமாக விற்பனையாகும் முகக்கவசங்கள்..!!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய அளவு முகக் கவசங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அலைமோதுவதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு, குருந்துவத்தையில் உள்ள அரசாங்க ஒசுசல மற்றும் நகரங்களில் உள்ள ஏனைய தனியார் ஒசுசலவில் கடந்த நாட்கள் முழுவதும் முகத்தை மறைக்கும் முகச் கவசங்களின் விற்பனைகள் பாரிய அளவு அதிகரித்துள்ளன.இந்நிலையில் இன்றைய தினம் அனைத்து முகக்கவசங்களும் முழுமையாக விற்பனையாகி முடிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்களே இந்த முகக் கவசத்தை அதிகமாக கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்