யாரும் அறியாத முடக்கத்தான் கீரையின் மகத்துவம்…… !

முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்று அழைக்கப்படும் இது காலப்போக்கில் மருவி முடக்கத்தான் ஆகிவிட்டது. மனிதன் முடங்காமல் பார்த்து கொள்ளும் திறன் பெற்ற இது ஒரு அரிய வகை கீரையாகும்.. மூட்டு வலியை போக்குவது இதன் முக்கிய சிறப்பு! மூட்டுகளில் உள்ள யூரிக் ஆசிட்- ஐ சிறுநீரகத்துக்கு எடுத்து சென்று வெளியேற்றுகிறது. அதே சமயம் அங்கு பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றை விட்டு விடுகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. ஆனால் மூட்டுகள் பலப்பட்டு சக்தி கூடுகிறது.

பல அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த முடக்கற்றான் கீரையை குறைந்த பட்சம் மாதம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதில் தயாரிக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தியும் பல பயன்களை பெறலாம். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைப்படி, முடக்கத்தான் கீரையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல நன்மைகளை கொண்டது.இதை நல்லெண்ணையுடன் கலந்து தலைமுடியை அலச முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதை தலையில் தேய்த்து குளிப்பதால் உச்சி மண்டையில் உள்ள அரிப்பு, பொடுகு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. அதேப்போல சருமத்துக்கும் பல பயன்களை அளிக்கக்கூடியது. உடலில் சக்தியை அளித்து, அசதியை போக்கி, புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது ஆகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்