அடுத்த பதிலடி உங்களுக்குத் தான்..!! ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் மிரட்டல்..!

மத்திய கிழக்கில் உள்ள வெளிநாட்டுப் படைகள் ‘ஆபத்தில் இருக்கலாம்’ என்று ரூஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறுவது குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி, தெஹ்ரானுக்கு சவால் விடுத்ததை அடுத்து ஈரானிய ஜனாதிபதியின் கருத்துக்கள் தற்போது வந்துள்ளன.ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி, வெளிநாட்டு படைகள், மத்திய கிழக்கிலிருந்து தங்கள் படைகளை திரும்ப பெறுமாறு கூறியுள்ளார். மேலும், அவர்கள் பிராந்தியத்தில் இருந்தால் ‘ஆபத்தை எதிர் நோக்கக்கூடும்’ என்று எச்சரித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கும் போது;

இன்று, அமெரிக்க சிப்பாய்கள் ஆபத்தில் உள்ளன. நாளை ஐரோப்பிய சிப்பாய்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் ஹசன் ரூஹானி நேற்றைய தினம் தொலைக்காட்சியில் எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார்.
ரூஹானியின் கருத்துக்கள், அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திய முதல் தடவையாகும்.ஈரானுக்கும் ஆறு உலக வல்லரசுகளுக்கும் இடையில் 2015 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு பெரிய அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறுவது குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெஹ்ரானுக்கு சவால் விடுத்து ஒரு நாள் கழித்து இந்த கருத்துக்கள் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்