கதிரையை காப்பாற்ற ரணில் புதுவியூகம்…! கருஜெயசூரியவிற்கு கட்சியின் தேசியத் தலைவர் பதவி..!!

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் என்ற பொறுப்பை கரு ஜயசூரியவிடம் வழங்க ரணில் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஓரிரு நாட்களில் கரு ஜயசூரியவை சந்தித்து தனது யோசனையை தெரிவிக்க ரணில் திட்டமிட்டுள்ளார்.கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பை ஏற்று, கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தவும் கேட்டுக் கொள்ளப்படவுள்ளார்.கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பு கருவிற்கு வழங்கப்பட்டால், பௌத்த சிங்கள வாக்குகளை கவர முடியுமென ரணில் தரப்பு திட்டமிடுகிறது.

இதேவேளை, சஜித் தரப்பினர் நேற்று கோரியதற்கு இணங்கி, கட்சி தலைமையை துறக்கப் போவதில்லையென தனது ஆதரவாளர்களிற்கு ரணில் தெரிவித்துள்ளார்.கட்சியின் செயற்குழு தான், கட்சிக்கு ஒரு புதிய தலைவரை நியமிக்க முடியும், நாடாளுமன்ற குழு அல்ல என்று கூறியுள்ளார். இதுபோன்று, நேற்றிரவு சந்திப்பின் முடிவில் பிரேமதாச பிரிவினர் எடுத்த அதிகாரப்பூர்வமற்ற வாக்குகளை அர்த்தமற்றது என்று அவர் தள்ளுபடி செய்துள்ளார்.கட்சி அரசியலமைப்பின் படி, தலைமையில் மாற்றம் ஏற்பட, செயற்குழு ஒரு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் அல்லது தற்போதைய தலைவர் பதவி விலக வேண்டும் என்றுk; அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்