இறந்த சிசுவை பையில் மறைத்து வைத்த 20 வயது தந்தை பொலிஸாரால் அதிரடிக் கைது..!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது சிசுவை பையொன்றில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தம்பலகாமம் – ஈச்ச நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் வயிற்றுவலி மற்றும் இரத்தப் போக்கு காரணமாக 19 வயதுடைய யுவதியொருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார்.
இந் நிலையில், வைத்தியர்களுக்கு குறித்த யுவதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து பொலிஸார் யுவதியின் கணவரிடம் விசாரணகளை முன்னெடுத்தபோது, தனது மனைவி சிசுவொன்றினை பெற்ற நிலையில் அச்சிசு உயிரிழந்த நிலையில் இசிசுவை பையொன்றில் போட்டு காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில், குறித்த நபரை கைது செய்த பொலிஸார், சிசு உயிருடன் இருந்த நிலையில் கொலைசெய்து பையொன்றில் போட்டு மறைத்து வைத்தார்களா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிசுவின் சடலம் மீட்கப்பட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்கு சிசுவின் உடல் உட்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், சிசுவின் தாயார் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிசுவை மறைத்து வைத்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்