கொழும்பு மாநகரில் SLIIT தமிழ் மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்..!

தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள பிரபல அரச தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில்(SLIIT) பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.நேற்றைய தினம் ( 15.01.2020) காலை வேளையில் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் மேற்படி நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட மாணவர்களின் வழிநடத்தலில், இறுதியாண்டு மாணவர்களின் ஒழுங்கமைப்புடனும், சக மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் தைப்பொங்கல் நிகழ்வை வெற்றிகரமாக கொண்டாடியுள்ளனர்.இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மிக அதிகமான பெரும்பான்மையின மாணவர்கள் கல்வி பயிலும் இந்த நிறுவனத்தில், கல்விகற்கும் தமிழ் மாணவர்களினால் மேற்படி நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தகவலும் புகைப்படங்களும்: அ.விபூசன்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்