யாழ்- கொழும்பு புகையிரதத்திற்கு தென்மராட்சியில் நடந்த கதி..!!

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் புகையிரதம் சாவகச்சேரி- சங்கத்தானைப் பகுதியில் பழுதடைந்த நிலையில், புதிய புகையிரதம் கொண்டுவரப்பட்டு காலை 10.30 மணிக்கு மீண்டும் கொழும்பு பயணமாகியுள்ளது.காலை 6.30 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் 7.15 மணியளவில் சங்கத்தானை பகுதியில் பழுதடைந்து நின்றுவிட்டது. இதனையடுத்து பயணிகள் அந்தரித்துக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக செயற்பட்ட புகையிரத திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு புகையிரத இயந்திரத்தை வரவழைத்து, பழுதடைந்த புகைரதம் சாவகச்சேரி புகைரத நிலையத்திற்கு இழுத்துவரப்பட்டு அங்கு பழுதடைந்த இயந்திரம் கழற்றிவிடப்பட்டு புதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு கொழும்புக்கு பயணமானது. இதனால், யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்