தாடி வளராமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ஆண்கள் வயதுக்கு வந்த அடையாளமாக இருப்பதில் தாடியும் ஒன்று. பல பெண்களின் மிக பிரியமான ஒன்றாக இந்த தாடி உள்ளது. சில ஆண்கள் இந்த தாடி முடிகள் வளரவில்லை என்கிற வருத்தத்தில் இருப்பார்கள்.
அவர்களின் மன வேதனையை எளிதில் போக்குவதற்கு ஏதாவது வழி உள்ளது என எப்போதும் தேடுவார்கள். இந்த பிரச்சினைக்கு மிக விரைவிலே தீர்வை தருகிறது முதன்மையான இயற்கை முறைகள். இந்த ஆயுர்வேத குறிப்புகளை வைத்து எப்படி தாடியை வளர செய்வது என்பதை இனி அறிவோம்.

தாடி ஏன் வளரவில்லை..? பல ஆண்களின் பிரச்சினையாக உள்ள இந்த தாடியை வளர வைக்க பலரும் பலவித வழிகளில் முயற்சி செய்கின்றனர். உண்மையில் தாடி வளராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். ஹார்மோன்களின் சமநிலை மாறுதல், பரம்பரை ரீதியான பிரச்சினை, ஆண்மை குறைவு, ஆரோக்கியமற்ற உணவு முறை போன்றவற்றை மருத்துவர்கள் கூறுகின்றனர்.சிறந்த முறை உங்களின் தாடியை எளிதில் வளர வைக்க இந்த் குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே அருமையான பலன் கிடைக்கும். தேவையானவை :-எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்,இலவங்க பொடி 1 ஸ்பூன்

செய்முறை :-முதலில் இலவங்கப்பட்டையை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தாலே ஆண்களின் தாடி அருமையாக வளரும்.ஆலிவ் எண்ணெய் தாடியை நன்கு வளர செய்ய ஆலிவ் எண்ணெய்யை சர்க்கரையுடன் கலந்து கொண்டு முகத்தில் தடவாம். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முடியின் வளர்ச்சியை தூண்டி விடும். இந்த குறிப்பை தினமும் செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.எண்ணெய் வைத்தியம் தாடி முடி அருமையாக வளர் வேண்டும் என்றால் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்கள். இந்த் குறிப்பு சிறந்த தீர்வை தருகிறது. தேவையானவை :- நெல்லிக்காய் சாறு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ரோஸ்மேரி எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :-நெல்லிக்காய் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து தாடி வளராத பகுதியில் தடவவும். இதே போன்று தினமும் செய்து வந்தால் தாடி முடி நன்கு வளரும். அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் ரோஸ்மேரி எண்ணெய்யை கலந்து முகத்தில் தடவினாலும் தாடி முடி வளர தொடங்கும்.கடுகு இலை தாடியின் முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை… கடுகு இலை சாறு 3 ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய் 3 ஸ்பூன்

செய்முறை :- முதலில் கடுகு இலையை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் நெல்லிக்காய் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் தாடி வளர செய்யும்.ஆரோக்கிய உணவுகள் ஆண்களின் தாடியை அழகாக வளர செய்ய உணவுகள் தான் சிறந்த தீர்வு. இதற்கு நீங்கள் தினமும் வால்நட்ஸ், பாதாம், ப்ரோக்கோலி, முளைக்கீரை, கொய்ய பழம், கேரட், போன்ற ஆரோக்கியான உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தாலே போதும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்