வடக்கு, கிழக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபாய அறிவிப்பு…நாளை முதல் அடைமழை..!!

நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் நாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் அடைமழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் காலை நேரத்தில் மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலை நேரத்தின் சில இடங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இடி, மின்னல் மூலம் ஏற்படும் ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்