பொதுத் தேர்தலில் வெற்றிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியில் நன்றி தெரிவித்து அசத்திய பிரித்தானியப் பிரதமர் ஜோன்ஸன்..!

பிரித்தானியத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார்.பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி எனக் கூறி முடித்தார்.பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்