ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தடகள அணித் தலைவியின் விபத்து..!!

13 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகளில் கலந்­துகொள்ள­வுள்ள இலங்கை தட­கள அணியின் தலை­வியும் 800 மீற்றர் ஓட்டப் போட்­டியின் தேசிய சம்­பி­ய­னு­மா­கிய நிமாலி லிய­னா­ராச்சி விபத்தொன்றில் சிக்கி காய­ம­டைந்­துள்ளார்.இவரது காயம் கார­ண­மாக பெரும் அதிர்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.நிமாலி லியா­னா­ராச்சி தனது மோட்டார் சைக்­கிளில் காலையில் பயிற்­சிக்­காக பய­ணித்துக் கொண்­டி­ருந்­த­போதே விபத்­துக்­குள்­ளா­னதாக தெரி­விக்கப்­ப­டு­கின்­றது.இத­னைய­டுத்து, உட­ன­டி­யாக தேசிய வைத்­தி­யசாலையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். மேலும், அவ­ரது கையில் எலும்பு முறிவு ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.நிமாலி லிய­னா­ராச்சி நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளையாட்டுப் போட்­டிகளில் தட­கள குழாத்துக்குத் தலைமை தாங்­குகின்­றமை விசேட அம்­ச­மாகும்.அத்­தோடு குறித்த போட்டித் தொடரில் 800 மீ., 1500 மீ, மற்றும் 400 மீ. அஞ்­சலோட்டப் போட்­டி­க­ளிலும் நிமாலி கலந்துகொள்விருந்தார்.அதே­வேளை கடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நிமாலி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­கள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திக­தி­ வரை நேபா­ளத்தில் நடை­பெ­ற­வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்