22 நாட்களாக நடுக்கடலில் சிக்கி ஆமை ரத்தத்தில் உயிர் வாழ்ந்த மீனவர்கள்…!! கரை திரும்பிக் கூறிய திகில் அனுபவம்..!!

ஆமை இரத்தத்தை தினமும் குடித்து இறந்த சக மீனவரின் பூதவுடலை ஆறு நாட்களாக உடன் வைத்திருந்த நிலையில், இறுதியாக கடலில் தூக்கிப் போட்டோம் என கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (37 ) ஆகியோர் திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(10) இரவு அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்த பின்னர், தத்தமது வீட்டிற்கு சென்றடைந்தனர்.

இவ்வாறு வீட்டிற்கு வந்தவர்கள் இறந்த சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் சிறிகிருஷ்ணன் (47) என்பவர் 10 நாட்களின் பின் இறந்ததாகவும், அவரின் உடலை தாங்கள் 6 நாட்களாக தங்களுடன் வைத்துக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய பூதவுடலை தங்களின் மிதக்கும் உடையில் சுற்றி கடலில் விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்