மீண்டும் பரபரப்பாகும் யாழ்ப்பாண வான்பரப்பு..! தலைக்கு மேலாக பறக்கப் போகும் சர்வதேச விமானங்கள்..!! பயணச் சீட்டும் தயார்..!!

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, இம் மாதம் 17ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.இதற்காக, பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது.இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.அதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னை விமான நிலையத்திற்கே 1வது விமான சேவை நடைபெறுமென தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது தரம் உயா்த்தப்பட்டமைக்கான சான்றிதழ், இதுவரை இந்திய சிவில் விமான கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு கையளிக்கப்படவில்லை.இதனால் இந்தியன் எயார் லைன்ஸ் தனது அதிகார பூர்வ பறப்பு விமான நிலையங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பெயர் இணைக்கப்படவில்லை.

குறித்த சான்றிதழ் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதல் கட்ட பணிகள் பூர்த்தியாகியதன் பின்னர் 17ம் திகதி திறப்புவிழாவிற்கான பரிசோதனைக்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் குழு விமான நிலையத்தின் தரத்தினை பரிசோதிக்க வருகை தரவுள்ளனர்.அவ்வாறு வருகை தரும் குழுவினர் சான்றிதழ் வழங்கப்படும் பட்சத்தில், 17ம் திகதி முதல் தடவையாக பரீட்சார்த்தமாக விமானி மட்டும் பயணிக்கும் விமானம் யாழ்ப்பாணம்விமான நிலையத்தினை வந்தடைந்து விமான நிலையத்தை சுற்றி வட்டமடித்து விமான ஓடு பாதையில் விமானத்தை தரை இறக்க முடியுமா என்பதனை கண்டறிவார்.

போதிய வசதி உண்டு என விமானி எண்ணும் சந்தர்ப்பத்திலேயே, விமானம் தரை இறங்கும் அவ்வாறு குறித்த விமானம் தறை இறங்கினால் மட்டுமே அடுத்த கட்டமாகபயணிகளுடனான விமான சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதனால் விமான நிலையம் எதிர் வரும் 17ம் திகதி திறக்கப்பட்டாலும், இம்மாதம் இறுதியிலேயே பயணிகள் பயணிக்கும் நிலமை ஏற்படும்.

அவ்வாறு பயணிகள் சேவை ஆரம்பிக்கும்போதும் பகல்சேவைகள் மட்டுமே இடம்பெறும் இரவு சேவைகளும் அதிக மழைகாலத்திலும் சேவையில் ஈடுபடும் வசதிகள் தற்போது விமான ஓடுபாதையில் கிடையாது. அதாவது இரவு சேவைக்கான விசேட மின் ஒளி சேவை இதுவரை பொருத்தப்படவில்லை.இதேநேரம் குறித்த யாழ்ப்பாணம் விமான சேவையினை ஆரம்பிப்பதில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளே தாமதம் ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது தற்போது வாரம் ஒன்றிற்கு கட்டுநாயக்காவில் இருந்து சென்னைக்கு 50 விமான சேவை இடம்பெறுவதன் மூலமே குறித்த விமான நிலையத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதனால்,யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்தால் இச் சேவை குறைவடையும் என அதிகாரிகள் கருதுகின்றனர் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்