31வது நாளாகவும் தொடரும் பல்கலைக்கழக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு..! ஜனாதிபதி மைத்திரியின் முக்கிய பணிப்புரை..!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் குறித்த பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.சம்பளம் குறித்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடியதனை தொடர்ந்து இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 31வது நாளாகவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்