ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- பொதுஜன பெரமுன இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து..!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (10) முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில இரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்