எவ்விதமான தன்னலமும் கருதாது தனிமனிதனாக நின்று தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் கொடை வள்ளல்…!!

உன்னத பணிகளின் கதாநாயகன் பற்றிய ஓர் உண்மையான பதிவு இது..தியாகி அறக்கொடை நிதியத் தலைவர் தியாகேந்திரனின் மெய்சிலிர்க்கச் செய்யும் மனிதநேயப்பணிகள்…!! தியாகி அறக்கொடை நிதியமும் அதனுடைய தலைவர் திரு வாமதேவா தியாகேந்திரனும் இன்று மக்கள் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருபவர்களாக காணப்படுகின்றார்.ஒரு தூரநோக்கு பார்வையைக்கொண்டுள்ள தியாகி அறக்கொடை நிதியமானது மாதாந்தம் சுமார் 800ற்க்கு மேற்பட்ட மக்களிற்கு மாதாந்த உதவிகளை மாதந்தோறும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் இவ் உதவிகள் 75 வீதமானோரிற்கு வங்கி கணக்கின் மூலம் அனுப்பிவைக்கப்படுவதோடு 25 வீதமானோரிற்கு உலர் உணவு பொருட்களாகவும் வழங்கப்பட்டுவருகின்றது.ஒரு அரசியல் தலைவன் செய்யாத காரியங்களை செவ்வனே மக்களிற்காகச் செய்துவரும் தியாகேந்திரன் ஐயாவின் பணிகள் போற்றுதற்குரியது.இவர்கள் போன்றோர் மக்களை நல்வழிப்படுத்தி வருவது எமது சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடையாகும்.மேலும், தியாகி அறக்கொடை நிதியத்தலைவரால் மக்களிற்கு கோப்பாய் பூமியில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுவரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுற உள்ள நிலையில், வறிய பிள்ளைகளிற்கு சத்துணவு வழங்கும் பொருட்டும் மாட்டுப்பண்ணை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. சுருங்கச் சொன்னால், தியாகி என்ற சொல் ஒரு தனிமனிதனிற்குரியதல்ல. அந்த சொல்லில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் சேவை!!!

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்