பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானுக்கு வந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு..!!

10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பயங்கரவாதிகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருந்ததால் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு அளிக்க கூடிய பாதுகாப்பு அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஹோட்டல் , செல்லும் வழி, மைதானம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி 10 வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டனர். ஒருநாள் போட்டி கப்டன் கருணாரத்னே, 20 ஓவர் அணி கப்டன் மலிங்கா உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் ஆடவில்லை.பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 27-ந்திகதி நடக்கிறது. 2-வது ஆட்டம் 29-ந்திகதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி அக்டோபர் 2-ந்திகதியும் நடக்கிறது. 20 ஓவர் ஆட்டங்கள் அக்டோபர் 5, 7 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடக்கின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்