இராணுவத்தில் இணையும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன்..!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் நாளை முதல் இலங்கை இராணுவத்தில் இணைகிறார்.இராணுவத்தில் ஆணையிடப்பட்ட அதிகாரியாக (Commissioned Officer) அவர் நியமிக்கப்படுவார் என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.இதன்படி, சந்திமல் இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடுவார்.எனினும், எதிர்காலத்தில் இராணுவத்தில் இணைவதற்கான சட்டபூர்வ விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சந்திமல் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக சேர்க்கப்படுவார்.இதன்படி, இராணுவத்தின் 2ம் லெப்டினன்ட் தரம் அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தில் சந்திமல் நியமிப்படுவார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்