இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினால் பாதுகாப்பு தீவிரம்..!!

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத ஆறு உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதை அடுத்து அங்கு தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதற்கமைய திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் வாகனங்களும், பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் விசேட ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயணிகளின் பிராயண பைகளையும், சந்தேகத்திடமான பொதிகளையும் சேதனையிட்டு வருகின்றனர்.இதனை தவிர, தூத்துக்குடியில் மாவட்டம் தழுவிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தூத்துக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வெவ்வேறு இடங்களில் ஆறுக்கும் அதிகமான விசேட சேதனை சாவடிகளை அமைத்து தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், ஏனைய வணக்க ஸ் தலங்களிலும் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் செயற்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் 6 உறுப்பினர்கள் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளதாக இந்திய உளவுத்துறை நேற்று அறிவித்தது.இந்தக் குழுவில் ஒரு பாகிஸ்தான் நாட்டவரும், 5 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இலியாஸ் அன்வர் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்