வடக்கு அரச திணைக்களங்களில் வெளி மாகாணத்தினரை நியமிக்க வேண்டாம்… பிரதமர் ரணிலிடம் நேரில் வலியுறுத்திய சீ வீ.கே.

வடக்கு மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வெளி மாகாணங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் நியமிக்கப்படுவதை பிரதமார் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு நிறுத்தவேண்டுமென வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.இது குறித்து சிவஞானம் மேலும் கூறுகையில், “வடக்கிலுள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் ஊழியர் வெற்றிடங்களுக்கு வடக்கு மாகாணத்திற்கு வெளியில் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.இது பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையாகும். எமது மாகாணத்திலேயே பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையற்றிருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும்” என கூறினார்.யாழ். பட்டதாரிகள் தங்களுக்கு வேலை வாய்ப்புக்களை உடனடியாக பெற்றுத்தருமாறு அரசாங்கத்தை கோரி வருகின்ற நிலையில், அவைத்தலைவர் பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கையை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்