மலையகத்தை இன்று காலை உலுக்கிய கோர விபத்து..!! பெற்றோர் ஸ்தலத்தில் பலி… மூன்று பிள்ளைகளும் படுகாயம்…!!

நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்ததாக தெரியவருகின்றது. ஏனைய மூவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணவன், மனைவியான டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) மற்றும் ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த தாய், தந்தை மற்றும் 6,16,19 வயதுடைய பிள்ளைகள் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்