பிரபல சுற்றுலா விடுதிக்கு விருந்தினராக வந்த விசித்திரமான உயிரினம்..!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

நுவரெலியா அப்லேக் வீதியில் உள்ள சுற்றுலா விடுதியில் வித்தியாசமான வண்ணத்திப் பூச்சி ஒன்று இன்று காலை இனங்காண பட்டுள்ளது. இந்த வித்தியாசமான வண்ணத்திப் பூச்சி சுற்றுலா விடுதியின் சுவர் ஒன்றில் அமர்ந்து இருப்பதை குறித்த விடுதியின் உரிமையாளர் இனங்கண்டுள்ளார்.வண்ணத்திப் பூச்சிகள் அதிகமாக பறக்கும் பிரதேசமாக நுவரெலியாப் பிரதேசம் இனங்காணப்பட்ட போதிலும் தற்பொழுது நுவரெலியா பிரதேசத்தில் வண்ணத்திப் பூச்சிகள் குறைவடைந்த நிலையில் காணபடுவதாகவும், சிவனொளிபாதமலை பருவகாலத்தில் நுவரெலியா வனப்பகுதியில் இருந்தே, சிவனொளிபாதமலைக்கு இலட்சக்கணக்கான வண்ணத்திப் பூச்சிகள் பறந்து செல்வதை காண முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.விவசாய பயிர்செய்கைகளுக்கு தெளிக்கப்படுகின்ற மருந்துவகைகளின் காரணமாகவே நுவரெலியாப் பகுதியில் வண்ணத்தி பூச்சிகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.நுவரெலியா பிரதேசத்தில், சுற்றுலாப் பயணிகள் வருகையின் போது, சிறுபிள்ளைகளுக்கு வண்ணத்திப் பூச்சிகளை காண்பிக்கக் கூடியவாறு இருந்ததாக மக்கள் சுட்டிகட்டுகின்றனர்.எனவே, இன்றய தினம் இனங்காணபட்ட இந்த வண்ணத்து பூச்சியானது எஸ். பிரதீப் என்ற உரிமையாளருடயை சுற்றுலா விடுதியில் இருப்பதை அனேகமான மக்கள்பார்வையிட்டு செல்லுகின்றமை குறிப்பிடதக்கது. இதன் நீளம் நான்கரை அங்குலமும், இரண்டரை அங்குலம் அகலமும் கொண்டமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்