பறக்கும் விமானத்தில் திடீர் பிரசவம்.. ! விமானக் கழிப்பறையில் பிறந்த குழந்தை..!

டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறையில் பெண்ணொருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.பெண் கழிப்பறைக்குச் சென்ற போது அங்கு அவருக்கு அவசரமாக பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சையளித்த நிலையில் விமானம் அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது.குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்த நிலையில், தலையில் சிறிது இரத்தம் வடிந்தவாறு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை குறித்த விமான நிறுவனமே வெளியிட்டுள்ளது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்