ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டு யாருமற்ற வீட்டில் அநாதையாக தந்தையை கைவிட்ட பிள்ளைகள்..!! யாழில் நடந்த கொடூரம்..!

காரைநகர் மொந்திபுலத்தில் முதியோர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏமாற்றப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தனியே வாசித்து வருகிறார்.முதியோர் குறித்து தெரிவிக்கையில், காரைநகர் மொந்திபுலத்திலுள்ள பகுதியில் வாசித்து வருபவர் பாலசிங்கம் (வயது – 80) இவரது பிள்ளைகள் இவரது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு தனியே தவிக்க விட்டுள்ளனர்.தற்போது குறித்த முதியோர் காரைநகருக்கு வெளியே வசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல நாட்களாக உணவின்றி , எலும்பும் தோலுமாக, இயக்கமற்ற நிலையில் இருந்துள்ளார். இவரை காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீட்டு காரைநகர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்