தாய், தந்தையர்களை இழந்த பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்… !! கல்வி அமைச்சரின் அதிரடி உத்தரவு..!

தாய் தந்தையர் அற்ற பிள்ளைகளை அருகில் உள்ள தேசிய பாடசாலைகளிலும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.தாய் தந்தையர் அற்ற பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் கற்பதற்கான அனுமதி பாடசாலை அதிபர்களால் மறுக்கப்படுவதாக முன்னைய காலங்களில் குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த நிலைமையிலேயே, அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இனிவரும், காலங்களில் சிறுவர் இல்லங்களில் வாழும் மாணவர்களுக்கு அருகில் உள்ள முக்கிய பாடசாலைகளில் கற்பதற்கான சந்தர்ப்பம் இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்