தமிழர்கள் உட்பட 14 இலங்கையர்களுக்கு சர்வதேசப் பிடியாணை..!!

இலங்கையர்கள் 14 பேருக்கு எதிராக சர்வதேச குற்ற பொலிஸாரினால் ((Interpol) சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் குற்றச்செயல்கள் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.சர்வதேச பொலிஸாரின் தகவலுக்கு அமைய குறித்த 14 பேர்களில் நான்கு பேருக்கு விசேட சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.சஜீவ டி சொய்சா எனப்படும் கொஸ்கொட சுஜீ, எமில் லக்ஷ்மி காந்த், முனுசாமி தமசீலன்இ விக்னராசா செல்வாதன் என்ற 4 பேருக்கே இந்த விசேட சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிராக கொஸ்கொட சுஜீக்கு விசேட சிகப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 10 பேருக்கு எல்லை சட்டத்தை மீறி குற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எல்லை சட்டத்தை மீறி வெளிநாடுகளில் இருந்து சுற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கே இந்த சிகப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்