தொடர் தோல்விகளின் எதிரொலி…! பறிபோகின்றது மலிங்கவின் பதவி…? இலங்கை அணிக்கு மீண்டும் புதிய கப்டன்..!!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.லசித் மலிக்க தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கவுடாக இடம்பெற்று வரும் ஒருநாள் தொடரில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அது மாத்திரமின்றி மலிங்க தலைமையின் கீழ் இலங்கை அணி இதுவரை தென்னாபிரிக்க அணியுடன் 07 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த ஏழு போட்டிகளிலுமே இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இந் நிலையிலேயே இலங்கை அணிக்கு எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் புதிய தலைவரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி சொந்த மண்ணிலேயே தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்