பரீட்சைகளே இல்லாத தேசம்…!! உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை ..!

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில் பின்பற்றப்படும் ஒரு ஏற்பாடு.

மேலைநாடுகள் இதனைப் பெரிதும் விரும்பித் தமது நாடுகளில் தற்போது அறிமுகம் செய்து வருகின்றன.

ஆற்றல் மிக்க மாணவர்களை இனங்கண்டு, அவர்களைத் தனியாக ஒருவகுப்பில் வைத்துக் கற்பிப்பதைப் பலரும் விரும்புவர். பல்வகை ஆற்றல் உள்ளவர்களை ஒரே வகுப்பில் வைத்துக் கற்பிப்பது ஆசிரியர்களுக்குச் சிரமமானது. அவர்களுடைய பணி சுமை நிறைந்ததாகிவிடும் என்பதால் அதனைப் பலரும் விரும்புவதில்லை.

பரீட்சை இல்லாத நாடு என்று வியப்புடன் கூறும் அதே வேலை.. தரம் 4 மாணவர்கள் வரை பரீட்சை என்பது கிடையாது. ஆனால் அவர்களுடைய கல்வி தரம் என்றும் உயர்ந்த வண்ணம் காணப்படுவதுடன், என்றும் அபிவிருத்தி பாதை நோக்கி பயணித்த வண்ணம் உள்ளார்கள்.ஆமாம், எங்கும் அல்ல,இது எமது ஜப்பானிய நாட்டு பாடசாலைகளிலேயே இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றபடுகின்றன. இதுபோல், நடைமுறைகள் எமது நாட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்…?

ஜப்பானிய கல்வி முறை உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட மற்றொரு காரணம் அங்கு மாணவர்களின் முழுமையான (dall- round) கல்வியில் அக்கறை செலுத்தப்படுவதாகும். அத்தகைய முறையில் பாட ஏற்பாடு அங்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் வேளையின் போது கூட மாணவர்கள் ஆரோக்கியமான முறையில் தமக்குள் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் பயிற்சி வழங்கப்படுகின்றது.

செல்வந்த நாடுகளில் மனிதத் தொடர்புகள் குறைந்து விட்டன; குடும்பங்கள் சிறுத்து விட்டன; சமூக மாற்றங்களின் காரணமாக இவ்வாறான நிலை தோன்றிவிட்டது. பெரும்பாலான பிள்ளைகள் குடும்பத்தின் கவனிப்பின்றி தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாகி விட்டனர்.

பிள்ளைகளின் நடத்தைகள் எல்லை மீறிச் சென்றுள்ளது. வன்செயல், பாலியல் நடத்தைகள் என்பன சீர்கெட்டுள்ளன. பாடசாலைகளில் (AIDS) தொடர்பான விடயங்களைக் கற்பிக்க வேண்டியுள்ளது. (HIV -AIDS) என்பவற்றைப் பாடசாலைகளில் தவிர்ப்பது பற்றி ஆசிரியர்களுக்கான ஏராளமான கையேடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. தவிர்ப்பதற்கான சகல வழிமுறைகளும் இருபால் மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டிய நிலை மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்