இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? இன்றைய ராசி பலன்…(08.03.2019)

08-03-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 24-ம் நாள்.

திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவைகாவூர் சிவபெருமான் திருவீதி உலா. மயிலை கற்பகாம்பாள் ஆலய பிரகார விழா.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு

பொது: வளர்பிறை துவிதியை திதி மறுநாள் நள்ளிரவு 12.42 மணி வரை பிறகு திருதியை.உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.28 மணி வரை பிறகு ரேவதி.யோகம்: சித்தயோகம் இரவு 10.28 மணி வரை பிறகு அமிர்தயோகம்.

பரிகாரம்: வெல்லம்.

மேஷம்:

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்:

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்:

சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள்.வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி:

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சொந்த -பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள்.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

விருச்சிகம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு:

தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்:

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத் தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்:

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்